வியாழன், 3 ஜூலை, 2014

இந்திய விமான படையின் தொலைநோக்கு பார்வை

அடுத்த தலைமுறை இளைஞர்கள்
இந்திய விமானப்படையில் சேர
ஆர்வத்தை தூண்டும் வகையில்
புதிய 3டி மொபைல் கேம்
ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியன்
ஏர் போர்ஸ்.
'கார்டியன்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ்' என்ற
அந்த மொபைல்
கேமை விமானப்படை தளபதி சுகுமார்
இன்று வெளியிட்டார்.
எதிரிகளை தாக்கி அழிக்கும் சூ-30
எம்.கே.ஐ போர் விமானத்தின்
சாகசங்களின் அடிப்படையில் இந்த
வீடியோ கேம்
உருவாக்கப்பட்டுள்ளது. 14 முதல் 18
வயது வரையிலான
இளைஞர்களுக்கு விமான படையில்
சேர்வதற்கான
ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்
மொபைல் போனில் விளையாடும்
அப்ளிகேஷனை இந்திய
விமானப்படையினர்
உருவாக்கியுள்ளனர்.
ஆன்ட்ராய்டு, விண்டோஸ், ஐஓஎஸ் என
அனைத்து ஆபரேட்டிங் சிஸ்டங்களில்
உள்ள மொபைல்களிலும் இயங்கக்
கூடிய அளவில் இலவசமாக இந்த
3டி கேம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கேமை விளையாடும்
போது இளைஞர்கள் மிக த்ரில்லான
அனுபவத்தை பெறுவார்கள்,
ஒவ்வொரு நாளும்
அவர்களுக்கு இந்திய
விமானப்படையில் சேரும் ஆர்வம்
அதிகரிக்கும். இந்த கேமில்
பல்வேறு கட்டங்களாக
சாதனைகளை நிகழ்த்தும் வகையில்
காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால்
இளைஞர்கள் மத்தியில் நிச்சயம்
வரவேற்பு இருக்கும் என்று ஏர்
மார்ஷல் சுகுமார் தெரிவித்தார்.
Click here to download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக