technology news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
technology news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 நவம்பர், 2015

டேட்டா பிரச்சனைக்கு ஒரு தீர்வு

ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பேக்
அடிக்கடி தீர்ந்து விடுகின்றதா,
அளவாக பயன்படுத்தினால் டேட்டா அதிக
நாள் கிடைக்கும் என்று உங்களுக்கு
தெரியுமா. ஸ்மார்ட்போனில்
டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில
எளிய தந்திரங்களை தான் இங்கு நீங்கள்
பார்க்க இருக்கின்றீர்கள்.
மொபைல் டேட்டா பயனம் செய்யும்
போது இன்டர்நெட் பயன்படுத்தினால்
அதிக டேட்டா செலவாகும், இதை
தவிர்க்க புதிய இடங்களில் பைபை
பைன்டர் அப்ளிகேஷனினை
பயன்படுத்தலாம், இது அருகாமையில்
இருக்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை
கண்டறியும்.
இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்வதும்
அதிக டேட்டாவினை பயன்படுத்தும்.
முடிந்த வரை பதிவேற்றங்களை
குறைத்து கொள்வது நல்ல பலன்களை
தரும்.
பாடல் மற்றும் யூட்யூப் வீடியோக்களை
ஸ்ட்ரீம் செய்வது அதிக டேட்டாவை
எடுத்து கொள்ளும், மாறாக
அவைகளை பதிவிறக்கம் செய்து
பார்க்கலாம்.
வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் மற்றும் ஸ்கைப்
கால்களை தவிர்த்து எமோஜிகளை
கொண்டு குறுந்தகவல் அனுப்பலாம்.
உங்களுக்கு தேவையில்லாதவைகளை
டவுன்லோடு செய்யாதீர்கள்.
பதிவிறக்கம் செய்வதானால் வைபை
பயன்படுத்தலாம் இது மொபைல்
டேட்டாவை சேமிக்கும்.
முடிந்த வரை இலவசமாக கிடைக்கும்
அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம்.
சந்தையில் கிடைக்கும் பல
அப்ளிகேஷன்கள் இன்டர்நெட்
பயன்படுத்தும் வகையில் இருக்கும்
முடிந்த வரை அவ்வாறான செயலிகளை
தவிர்ப்பது நல்லது.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

அரிசியின் டெக்னாலஜி பயன்

ஆயுத பூஜை அன்று அனைவரும் கார்,
பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என
தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி
ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட்
தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை
குளிப்பாட்டிட்டான்.
விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு
வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது,
Incoming call வருது; ஆனா touch screen work
ஆகலை; Touch screen work ஆகாம போன்ல
எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock
கூட பண்ண முடியலை;
திருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும்
போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம்
வந்தது.
இப்படி போன் தண்ணீரில் நனைந்து
விட்டால், phone back cover, sim card, memory card,
battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு
air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு
phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும்
தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம்.
அரிசியால LCD Screen க்கு பின்னால்
இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச
முடியும் என்று Google கூறியது.
air lock cover-க்கு எங்கே போவது என
நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி
பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா
என்ன?" என அம்மா கேட்க, phoneஐ அரிசி
பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு,
'திக்திக்' மனதோட அரை மணி நேரம்
கழித்து எடுத்து பார்த்தேன்.
WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க்
ஆகுது. உடனே outgoing calls போகுதா, key
pad work ஆகுதா, music play ஆகுதா-னு
எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera
lensல தண்ணீர் திரை போல தெரிந்தது.
மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின்
உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly
alright.
எதிர்பாராம உங்களில் யாராவது
மழையில் போனுடன் நனைந்து விட்டால்,
இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என
நினைத்து Share செய்தேன்.

சனி, 4 ஏப்ரல், 2015

Microsoft-ன் புது சரக்கு

மைக்ரோசாப்ட் நிறுவனம்
தனது புதிய செயலியான
ஆபிஸ் லென்சை அறிமுகம்
செய்துள்ளது. ஆபிஸ் லென்ஸ்
செயலி நமக்கு தேவையான
டாகுமென்ட்களை நொடி
பொழுதில் ஸ்கேன்
செய்யக்கூடியது. ஆரம்பத்தில்
விண்டோஸ் போன்களுக்காக
மட்டும் வெளிவந்த இந்த
செயலி இப்போது
ஆன்டுராய்டு மற்றும் ஐ
போன்களுக்கும்
வெளிவந்துள்ளது.
சில நேரங்களில் நம்மிடம் ஒரு
ஸ்கேனர் இருந்தா எவ்வளவு
நல்லாருக்கும் என்று
நினைப்பது உண்டு. அந்த
மனக்குறையை போக்கும்
வகையில் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் ஆபிஸ் லென்ஸ்
செயலி செயல்படுகிறது.
விசிட்டிங் கார்ட், வைட்
போர்டு, டாகுமென்ட்ஸ்,
மெனு கார்ட் என்று எதையும்
விடாமல் ஸ்கேன் செய்து,
மைக்ரோசாப்ட் வோர்ட் மூலம்
தொகுத்துகொள்ளலாம்
(எடிட் )
சில வசதிகள்
ஆபிஸ் லென்ஸ் செயலில்,
விசிட்டிங் கார்டு
போன்றவைகளை ஸ்கேன்
செய்யும்போது, ஓரங்களை
சரியான வகையில் வெட்டி,
தரமான படமாக மாற்றுகிறது.
வோர்ட்பிரஸ் – வெப் டிசைனிங்
கற்றுக்கொள்ளுங்கள்
சாதாரண ஆச்சு வடிவில்
இருக்கும் செய்தி ஒன்றை OCR
தொழில்நுட்பத்தில் ஸ்கேன்
செய்து PDF, Doc, Jpeg போன்ற
பார்மட்களுக்கு
மாற்றக்கூடியது.
விசிட்டிங் கார்டுகளை
ஸ்கேன் செய்து போன்
தொடர்புகளில் (Contacts)
இணைக்கிறது.

புதன், 17 செப்டம்பர், 2014

youtube வீடியோவை இனி டவுன்லோட் செய்து பார்க்கலாம் – கூகிள் அறிவிப்பு

உலகின் முதன்மையான
வீடியோ தளமான youtube
இந்தியாவில் youtube
வீடியோக்களை இனி  யாரு
வேண்டுமானாலும்
டவுன்லோட் செய்து பார்க்கும்
முடியும் வகையில் ஒரு சில
நாட்களில்
இது பயன்பாட்டிற்கு வரும் என
கூகுளின் வைஸ்
ப்ரெசிடண்ட் Caesar Sengupta
கூறினார்.
இதன் மூலம் அனைவரும்
விருப்பப்பட்ட
வீடியோக்களை டவுன்லோட்
செய்து ஓய்வு நேரங்களில்
திரும்ப திரும்ப பார்க்கலாம்.
மேலும்
வீடியோ பாதிவாளர்கள் தங்கள்
வீடியோவை டவுன்லோட்
செய்யலாமா வேண்டாமா ?.
என்பதை
தீர்மானித்துக்கொள்ளலாம்.
எது எப்படியோ இனிமேல்
youtube
வீடியோவை டவுன்லோட்
செய்ய
வேறொரு தளத்திற்கோ அல்லது
கூகிள் plugin தேவையில்லை.

வியாழன், 11 செப்டம்பர், 2014

ஜீமெயிலில்(gmail) நடந்த திருட்டு

ரஷ்யாவை சேர்ந்த ஹாக்கிங்
நிறுவனம் ஒன்று தங்கள்
இணையதளத்தில் 50 லட்சம்
ஜிமெயில்  முகவரிகளையும்,
பாஸ்வேர்டுகளையும்
வெளியிட்டுள்ளது.
இதனை பிஷ்ஷிங்
தொழில்நுட்பம் எனப்படும்
போலியான இணையதள
வடிவமைப்பை பயன்படுத்தி இந்த
தகவல்களை திருடியுள்ளதாக
கூறப்படுகிறது.
இந்த தகவல்கள்
திருடப்பட்டது தொடர்பாக
கருத்து தெரிவித்துள்ள
டேனிஷ்
பாதுகாப்பு அமைப்பான
CSIS. .இதில் இடம்
பெற்றிருக்கும்
பெரும்பாலான முகவரிகள்
(அதிகப்படியான டேட்டாக்கள்
நிறைந்ததால்)
உபயோகப்படுத்தாமல்
இருப்பவை என்று கூறியுள்ளனர்.
இதுபோன்ற காரணங்கள்
நடக்கலாம் என்பதால் தான்
கூகுள்
தனது பரிந்துரைகளில்
அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்
கொள்ளும்படி கூறியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர். இந்த
செய்தி ஜிமெயில்
பயன்பாட்டாளர்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள
கூகுள் இது போன்ற சம்பவம்
ஏதும் நடைபெற்றதாக தகவல்கள்
இல்லை. இருந்தாலும் உங்கள்
கணக்கின்
பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற
வேண்டியது அவசியம்
என்று கூறியுள்ளது.

புதன், 10 செப்டம்பர், 2014

கைப்பேசி ஒரு எமன்

‘காலமெல்லாம் காதல் வாழ்க’
படத்தில் டெலிபோன்
அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர்
முரளி நோயாளியாக மாறும்
படக் காட்சி ஞாபகம்
இருக்கிறதா? அதுபோலவே,
செல்போன்
அழைப்பு வராமலேயே ரிங்
டோன் கேட்டது போல
நீங்களும் உணருகிறீர்களா?
அழைப்பு வந்துள்ளதா என
அடிக்கடி செல்போனை எடுத்துப்
பார்க்கிறீர்களா?
அப்படியானால்
உங்களுக்கு இருக்கலாம்.
ஏதோ ஒரு சூழ்நிலையையோ,
பொருளையோ கண்டு பயப்படுவதற்குப்
பெயர் ஃபோபியா.
போபியாக்களில் பல
வகை உண்டு. அதில் சமீப
காலமாக இளைஞர்கள்
மத்தியில் வலம் வரும்
போபியாவாக
மாறிவருகிறது ரிங்டோன்
போபியா என்கிறார்
திருச்சி கி.ஆ.பெ.வி.
அரசு மருத்துவக்
கல்லூரி துணை முதல்வரும்
மூளை நரம்பியல் துறைத்
தலைவருமான அலீம்.
“நீங்கள்
ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறீர்கள்.
அது நடக்காவிட்டால் என்ன
ஆகும்? டென்ஷன் ஏற்படும்,
பதற்றம் உருவாகும், கோபம்
வரும். செல்போன்
போபியாவிலும்
இதே பிரச்சினைதான்.
செல்போன்
அழைப்பு வந்தது போல
ஒரு உணர்வு மனதில்
அல்லாடிக் கொண்டிருக்கும்.
வாகனத்தில்
செல்லும்போது வைப்ரேஷன்
மோடில் வைத்திருந்
தாலும்கூட வைப்ரேஷன்
ஏற்பட்டது போன்ற
ஒரு உணர்வுவரும்.
உடனே செல்போனை எடுத்துப்
பார்ப்போம்.
இல்லை என்று தெரிந்ததும்
சிலருக்குச்
சலிப்பு ஏற்படலாம்.
ஒரே நாளில்
பலமுறை இப்படி நிகழ்ந்தால்
நம்மை அறியாமலேயே டென்ஷன்,
பதற்றம், கோபம், முரட்டுத்தனம்,
படபடப்பு ஏற்படுவது இயற்கைதானே.
இது நாள் கணக்கிலோ, மாதக்
கணக்கிலோ, ஆண்டுக்
கணக்கிலோ தொடர்ந்தால்
செல்போனைக்
கண்டாலோ எரிச்சல்
வந்துவிடும். இந்தப்
பிரச்சினைக்குச் சரியான
சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல்,
கண்டுகொள்ளாமல்
விட்டுவிட்டால்
ஒரு கட்டத்தில் மனநோய்கூட
ஏற்பட லாம்’’
என்று எச்சரிக்கிறார் அலீம்.
தவிர்க்க என்ன வழி?
இன்று செல்போன் இல்லாமல்
வாழ்க்கை இல்லை என்று சொல்லு மளவுக்கு எல்லோர்
வாழ்விலும் இரண்டறக்
கலந்துவிட்டது.
அப்படியானால், ரிங் டோன்
போபியாவைத் தவிர்க்க
வழியே கிடையாதா?
‘‘இருக்கிறது. அதற்குச்
செல்போன் பயன்பாட்டைக்
குறைப்பதுதான் ஒரே வழி.
இப்போது எந்த அளவுக்குச்
செல்போனைப் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோமோ அதைப்
பாதியாகக் குறைக்க
வேண்டும்.
இன்று இளைஞர்கள்தான்
அதிகளவில் செல்போனைப்
பயன்படுத்துகிறார்கள். எனவே,
அவர்கள் இந்த விஷயத்தில்
எச்சரிக்கை உணர்வுடன்
இருப்பது நல்லது.
ஒரு வேளை அடிக்கடி டென்ஷன்,
பதற்றம், படபடப்பு ஏற்பட்டால்
மருத்துவரை அணுகத் தயங்கக்
கூடாது’’ என
அறிவுரை கூறுகிறார்
அலீம்.
கதிர் வீச்சு பாதிப்பு
ரிங் டோன்
போபியா மட்டுமல்ல
செல்போனை அளவுக்கு அதிகமாகப்
பயன்படுத்துவதன் மூலம்
வயது,
பாலினத்துக்கு ஏற்றவாறு பல
நோய்கள்
உருவாகி வருகின்றன.
செல்போனைப்
பொறுத்தவரை அதிலிருந்து வரும்
கதிர்வீச்சால் மூளை அதிகம்
பாதிக்கப்படுகிறது .
செல்போன் கதிர்வீச்சு மூலம்
20 சதவீதம் முதல் 60
சதவீதம்வரை நோய்கள்
ஏற்படுவதாகக் கூறுகிறார்
அலீம்.
“செல்போன் கதிர்வீச்சு மூலம்
மூளைப் பகுதியின் அருகில்
உள்ள காது நரம்புகளில்
பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது காதுகேளாத்
தன்மையை உருவாக்கிவிடும்.
இதனால் மூளையில்
புற்றுநோய் கட்டிகள்
ஏற்படுமா என்பது குறித்துத்
தற்போது ஆய்வுகள்
நடைபெற்றுவருகின்றன.
மூளை பாதிக்கப்படுவதால்
வயதானவர்களுக்கு வரும்
ஞாபக மறதி எனப்படும்
அல்சைமர் நோய் வர
வாய்ப்பு உள்ளது. உடல் நடுக்க
நோய் எனப்படும் பார்கின்சன்
நோய்
ஏற்படுமா என்பது குறித்தும்
ஆய்வுகள் தொடர்கின்றன.
நரம்பியல் தொந்தரவாகத்
தலைவலிப்
பிரச்சினை ஏற்படலாம்.
தோள்பட்டையில்
செல்போனை வைத்துச்
சாய்ந்தபடி பேசுவதால்
தோள்பட்டை வலி,
கழுத்து வலியும் ஏற்படும்
ஆபத்து உள்ளது. செல்போனில்
இருந்து வரும் மின்காந்தக்
கதிர்வீச்சு காரணமாக
மூளை நரம்பு செல்கள்
பாதிக்கப்படும்” என்கிறார்
அலீம்.
குழந்தைகளுக்கு வேண்டாம்
இன்று குழந்தைகள், சிறுவர்,
சிறுமிகள்கூடச்
செல்போனைச் சாதாரணமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாக வளர்ந்த
பிறகே மூளை முழு வளர்ச்சியை எட்டும்.
சிறுவர்கள்,
குழந்தைகளுக்கு மண்டையோடு மெலிதாகவே இருக்கும்.
இவர்கள் செல்போனைப்
பயன்படுத்தினால் முதுமைக்
காலத்தில் ஏற்படும் பல
பாதிப்புகள்
சிறு குழந்தைகளுக்கும்
ஏற்படலாம்.
பொதுவாகச் செல்போன்
சூடாகும் வரை பேசுவதைத்
தவிர்ப்பது நம்மைக் காக்கும்.
செல்போனைக் காதுகளுடன்
ஒட்டிவைத்துப் பேசாமல்
இருப்பதும் நல்லது.
ஹெட்போன், புளூடூத்,
ஸ்பீக்கர் மூலம் பேசினால்
கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு என்பது நாம்
அறியாததல்ல.
செல்போனையும் அளவாகப்
பயன்படுத்தினால் அல்லல்
இன்றி வாழலாம்.

புதன், 3 செப்டம்பர், 2014

HOW TO USE SDCARD AS RAM TO OUR ANDROID MOBILES.........

Hai Friends, am going to tell
youHOW TO USE SDCARD AS RAM TO OUR
ANDROID MOBILES.........Its very simple and it
works great.we need1.sdcard but class 4 or
higher SD Card will give excellent speed to your
Phone.(best use 4gp or higher sdcard)2.Rooted
Android Mobile or Tablet.3.Card Reader.4.Minito
ol Partition Wizard software.I previously post
about the updation of android 2.1 to 2.3, or
higher.I face a major problem as performance
low,so this post is solve that.Go ahead for
custom rom.Note For Users: This method mostly
worked in allMachine Devices; Internal Memory
Trick will work on all devices but Ram Increasing
method is dependent on your phone’s ROM.
check whether Swapping is supported by your
phone's ROM or not.(just Google it as your ROM
name with “a2sd help” or “swap help” or a
touch similar to this for more specific
information about your Device’s ROM,. Don't do
before knowing about your rom. )so sony w8 or
x8 stock rom does not support the swapping.but
we update it to custom rom, it will support.my
device is: sony w8.am usingminicm7 shakira
romwhich supports swapping.K lets
Starts,..Note: Backup your important data from
sdcard to your pc or some other device.One
Important Thing Make sure Your Mobile is
rooted.Download theMini tool Partition Wizardand
install itto your pc.Insert your sdcard to your
pcby using card reader, 'don't use usb
cable'.Watch the below Video for get an idea
about partitionChange your video qaulity
tominimum 360p for better clarityAfter partition
put your memory card to your mobile.Now goto
setting-->CyanogenMod-->performance-->A2SD
(ext)setting-->available modes--> click,,->a2sd.i
t ask root permission.Then Reboot the
Device.Now we need Swapper 2 applicationfor
swap the sdcard as RAM.The Link for Swapper2
is:Swapper2Download the application from
Google play.,and install it.Then open the
Swapper2 applicationDon't Click ON Button
Before Setting up.Press the Menu Button and
Goto Setting-->1.TickRun swapper at
startup.2.Set /sdcard/swapfile.swp inswap
place.3.set the swap size whatever you want, i
set as 256mb ram inSwap size.(you set
according to your swap partition size)4.setswapp
inesswhatever you want from 10 to
100.5.TickSafe Unmount.6.TickSafe
Remount.GotoAdvanced Preferences.7.TickUse
Swap partition.8.TickRecreate swap
file.9.TickReformat swap.Now Come back.Click
theONButton it ask root Permission.Thats it, Now
your Mobile used this swap file as RAM for your
mobile.Let Now Check it whether it works or
not.Open theTerminal EmulatorTypesu
ThenTypefreeIt show the memory of the sdcard.In
that see the swap,if it show as 0 0 0 like that.It
means your swap is not workingsee the below
picture you get an idea.it show the swap
working.See the Last line of the above
pictureTotal used freeIt shows the swap 297436
71804 225632 its working.Instead of that 0 0 0
shows likethis means its not working.
Thanks for Reading...

SMS-ஐ அழித்து மானம் காக்கும் பயன்பாடு (application)

உங்கள் நண்பருக்கோ,
காதலிக்கோ நீங்கள தவறாக
அனுப்பிய
குறுஞ்செய்தியைப்
பற்றி இனி கவலைப்படவேண்டாம்.
அவர்கள் அதைப் படிக்கும்
முன்னரே அழித்துவிடும்
புது செயலி ஒன்று அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
"இன்விஸிபிள்
டெக்ஸ்ட்" (“Invisible Text”) எனும்
இந்த செயலி, பயனர்கள்
அனுப்பிய குறுஞ்செய்தியை,
பெறுபவர் படிக்கும்
முன்னரே அழித்துவிடும்
வசதியைக் கொண்டுள்ளது.
இதில் ஒரே சிக்கல்,
செயலி அழிக்கும் வரை, அந்த
குறுஞ்செய்தி படிக்கப்படாமல்
இருக்க வேண்டும்.
இதே போல, வீடியோ மற்றும்
குரல் பதிவுகள்,
புகைப்படங்கள்
ஆகியவற்றை அனுப்பிவிட்டு,
அவை குறிப்பிட்ட காலம்
வரை மட்டுமே பெறுநர்களின்
மொபைலில்
இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும்
டைமர் வசதியும் இதில்
உள்ளது.
ஆண்ட்ராய்ட், ஆப்பிள்  ஐ ஓஎஸ்
மற்றும்
பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த
செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைய
சமுதாயத்திற்கு மிகவும்
பயனுள்ள செயலி அல்லவா!
கூடவே ஒரு முக்கிய தகவல்:
உங்கள் குறுஞ்செய்தி மற்றும்
படங்களை பெறுபவரது மொபைலிலும்,
"இன்விஸிபிள் டெக்ஸ்ட்"
செயலி இருந்தால்தான் இந்த
அம்சம் வேலை செய்யும்.

திங்கள், 1 செப்டம்பர், 2014

ப்ளுடூத் பூட்டு

இங்கதான் வச்சிருந்தேன் எங்க
போச்சுன்னே தெரியல
என்னும் புலம்பலை நாம்
அடிக்கடி கேட்டிருப்போம்.
சாவியைத்
தொலைத்தவர்களின் புலம்பல்
அது. ஏனெனில் பூட்டைப்
பூட்டி சாவியை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது நமது வழக்கம்.
சாவி தொலைத்து சங்கப்படக்
கூடாது என்பதற்காக சில
நம்பர் பூட்டுகளும் வந்தன.
ஆனால்
நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸை உடைத்தவர்களும்
உண்டு. பூட்டவும் வேண்டும்
ஆனால் சாவியும் இருக்கக்
கூடாது என்பது ஒரு காலத்தில்
ஈடேறாத ஆசை. ஆனால்
தொழில்நுட்ப வளர்ச்சி இதைச்
சாத்தியப்படுத்தியுள்ளது.
பூட்டலாம் ஆனால்
சாவி வேண்டியதில்லை.
சாவி இல்லாமலே திறக்கலாம்.
கேட்கவே நன்றாக
இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
இந்தப் பூட்டின் வசதிகள் உங்கள்
ஆச்சரியத்தை மேலும்
அதிகப்படுத்தும்.
நோ கீ என்பதன் சுருக்கமாக
நோக் எனப்படும் இந்தப்
பூட்டு ப்ளுடூத்
தொழில்நுட்பத்தில் இயங்கும்.
இந்தப் பூட்டை உங்களிடம் உள்ள
ஸ்மார்ட் போனுடன்
இணைக்கும் ஸ்மார்ட் போன்
அப்ளிகேஷனை இணையத்தில்
டவுன்லோடு செய்துகொண்டால்
போதும். இரண்டு சிக்னலும்
மேட்ச்
ஆகும்போது மட்டுமே பூட்டு திறக்கும்.
இந்தப் பூட்டை நீங்கள்
எங்கு வேண்டுமானாலும்
எடுத்துச் செல்லலாம்.
சைக்கிளில்
சென்று சைக்கிளைப்
பூட்டலாம், பைக்கைப்
பூட்டலாம், ரயிலில்
செல்கிறீர்களா?
லக்கேஜ்களை ஒன்றாக
இணைத்துப் பூட்ட
வேண்டுமா?
கவலையே இல்லை இந்தப்
பூட்டு உங்களுக்குக்
கைகொடுக்கும்.
ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆகிய
இரண்டு வழிகளில் இயங்கும்
போன்களிலும் இந்தப் பூட்டின்
அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ள
முடியும். உங்களது நண்பர்கள்,
உறவினர்கள் ஆகியோர் நீங்கள்
இல்லாத நேரத்தில் உங்கள்
பூட்டைத் திறக்க
விரும்பினாலும் அதற்கும்
வழியிருக்கிறது.
ஒரு முறையோ அல்லது எப்போதுமோ அவர்கள்
பயன்படுத்திக்கொள்ளும்
வகையிலும் இந்தப்
பூட்டை உபயோகப்படுத்தும்
வாய்ப்புகள் அந்த
அப்ளிகேஷனில் உள்ளது.
யார் யார் எப்போதெல்லாம்
பூட்டைத் திறந்தார்கள் எனும்
ஹிஸ்டரியையும்
அப்ளிகேஷன் மூலம்
பார்த்துக்கொள்ளலாம்.
எனவே பாதுகாப்பு பற்றிப்
பயப்பட வேண்டியதில்லை.
ஒருவேளை மொபைல் சார்ஜ்
இல்லாமல் சுவிட்ச் ஆஃப்
ஆகிவிட்டால் அந்த நேரத்தில்
என்ன பண்ணுவது என்ற
கவலையும் வேண்டாம்.
அதற்கும் பாஸ்வேர்டு செட்
செய்துகொள்ளும்
வசதி இருக்கிறது. நோக்
பூட்டில் உள்ள
பேட்டரி அதற்குப் பயன்படும்.
ஸோ, டோண்ட் வொரி.
இது அடுத்த
ஆண்டு பிப்ரவரி மாதம்
கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதன் விலை 89 அமெரிக்க
டாலர். ஆனால்
இப்போதைக்கு 59 அமெரிக்க
டாலர். இதுவரை ஒரு லட்சம்
டாலர் அளவுக்கு புக்கிங்
ஆகிவிட்டது.
ஒரு பூட்டு வேண்டுமானாலும்
புக் செய்யலாம். இரண்டு,
மூன்று, ஐந்து, பத்து என
மொத்தமாகவும் புக்
செய்யலாம்.
அமெரிக்காவுக்கு வெளியே என்றால்
டெலிவரி சார்ஜாக கூடுதல்
15 டாலர் கூடுதலாகச்
செலுத்த வேண்டும்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

கணினியில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு கணனி USE
பன்வதற்கு தெரிந்திருந்தும்
கணனியை எவ்வாறு format
செய்வது என தெரியாது
கணனியில் OS
போடுவது கஷ்டம் என்று பலர்
நினைகிரார்கள் ஆனால்
அது சுலபம் தான்
என்று புரிந்து கொண்டால்
போதுமானது
நான் உங்களுக்கு விண்டோஸ்
7 எவ்வாறு இன்ஸ்டால்
பண்ணுவது என்று Step by Step
ஆக  சொல்லித்தருகிறேன்
முதலில் உங்களுடைய C
Drive , டெஸ்க்டாப் ( Desktop)
அல்லது மை டாக்குமென்ட்
( My Document )
அல்லது டவுன்லோட்
போல்டேர்களில்
( Download FOLDER ) ஏதேனும்
பைல்ஸ் இருந்தால்
அதை வேற டிஸ்க்கில்
அதாவது D Drive or E Drive இல்
copy
செய்து கொள்ளுங்கள் ,ஏன்
என்றால் Format செய்யும்
பொது C Drive முழுமையாக
அழிந்து விடும் .
விண்டோஸ் 7 டவுன்லோட்
செய்ய இங்கே செல்லவும்
WINDOWS 7 LINK
முதலில் விண்டோஸ் 7
முழுமையாக DVD இல் ரைட்
செய்து கொள்ளுங்கள்
அல்லது உங்கள் PENDRIVE வில்
copy செய்து கொள்ளுங்கள்
விண்டோஸ் 7 ஐ DVD இல்
எப்படி ரைட் செய்வது ?
நெட்டில்
இருந்து விண்டோஸ் 7
டவுன்லோட்
செய்து அதை நீரோ ( NERO
WRITING ) சாப்ட்வேர் மூலமாக
DVD இல் ரைட் செய்ய
வேண்டும்
அல்லது
நெட்டில்
இருந்து விண்டோஸ் 7 ISO
பைல் டவுன்லோட்
செய்து அது வழியாகவும்
DVD இல் காப்பி செய்யலாம்
விண்டோஸ் 7 ஐ PEN DRIVE வில்
எப்படி காப்பி செய்வது ?
PENDRIVE வில் விண்டோஸ் 7
காப்பி செய்வதற்கு WINDOWS 7
USB/DVD TOOL டவுன்லோட்
செய்து இன்ஸ்டால் பண்ணுங்க
இந்த சாப்ட்வேர் வெறும் 3 MB
மட்டும் தான்
இதை டவுன்லோட் செய்ய
இங்கே செல்லவும்
WINDOWS 7 USB/DVD TOOL
உங்களிடம் விண்டோஸ் 7 ISO
பையில் இருந்தால்
அதை WINDOWS 7 USB/DVD TOOL
மூலமாக PENDRIVE வில் BOOT
ஆக
காப்பி செய்து கொள்ளுங்கள்
விண்டோஸ் 7 ஐ WINDOWS 7
USB/DVD TOOL இல்
காப்பி செய்வது எப்படி ?
முதலில் PENDRIVE
வை CONNECT
செய்து கொள்ளுங்கள்
அப்புறம் WINDOWS 7 USB/DVD
TOOL ஓபன் செய்து SOURCE FILE
லில் BROWSE
கொடுத்து உங்கள்
விண்டோஸ் 7 ISO
பையிலை தேர்ந்து
எடுக்கவும் எடுத்த
பிறகு NEXT கொடுக்கவும்
கொடுத்த பின்னர் USB DEVICE
இல் கிளிக் செய்யவும் கிளிக்
செய்த பின்னர் BEGIN COPYING
கொடுத்து சிறுது நேரம்
காத்து இருக்கவும் பின்னர்
உங்கள் PENDRIVE FORMAT
ஆகி விண்டோஸ் 7 பைல்ஸ்
PEN DRIVE
விற்கு காப்பி ஆகும் 100 %
முடிந்த பிறகு COMPLETED
என்று வரும் அதில் CLOSE
கொடுத்தால் விண்டோஸ் 7
BOOT ஆக PENDRIVE வில் CREATE
ஆகி விடும்
PEN DRIVE மூலமாக
விண்டோஸ் 7 இன்ஸ்டால்
பண்ணுவது எப்படி என்று
பாப்போம்
முதலில் BOOT செய்த PENDRIVE
வை CONNECT
செய்து கொள்ளுங்கள்
பின்னர் விண்டோஸ் RESTART
செய்யவும் RESTART செய்த
உடன் F2 அல்லது DELETE
பட்டனை பிரஸ் செய்யவும்
அப்போது BIOS BOOT MANAGER
என்று வரும் அதில் BOOT என்ற
மெனுவில் வில் செல்லவும்
சென்று FIRST BOOT DEIVCE
பொதுவாக ஹர்ட்டிச்க்
( HARDDISK ) இல் இருக்கும்
அதை மாற்றி PENDRIVE
க்கு மாற்றவும் பின்னர் F10
பிரஸ் செய்து SAVE செய்தால்
PENDRIVE வில்
இருந்து விண்டோஸ் 7 BOOT
ஆகி விடும்
அல்லது
PENDRIVE வை CONNECT செய்த
பிறகு RESTART செய்து F12
பிரஸ் செய்யும் பொது 3
OPTION வரும் அதில் PENDRIVE
வை SELECT செய்து ENTER
பிரஸ் பண்ணுனாலே போதும்
விண்டோஸ் 7 BOOT
ஆகி விடும்
BOOT ஆன
பிறகு சிறிது நேரம்
கழிந்து WINDOWS LOADING FILES
என்று வரும் கீழே பாருங்க
அது போல வரும்
சிறுது நேரம் கழிந்து NEXT
கொடுங்க
பிறகு வரும் WINDOW வில்
INSTALL NOW கொடுக்கவும்
பிறகு I ACCEPT THE LICENCE
TERMS கிளிக் செய்து NEXT
கொடுக்க வேண்டும்
பிறகு வரும் WINDOW வில்
CUSTOM ADVANCED ஐ
தேர்வு செய்யவும்
NOTE :
இங்கு நீங்கள் கவனிக்க
வேண்டியது என்ன வென்றால்
புதிதாக லேப்டாப்
வாங்கி இன்ஸ்டால்
செய்பவர்களுக்கு உங்கள்
HARDDISK குறைந்த பட்சம் 500
GB  ஆக இருந்தால் ஹர்ட்டிச்க்
( HARDDISK ) DISK 0 UNALLOCATED
SPACE 500 GB என்று இருக்கும்
அல்லது
இப்போது உங்கள் விண்டோஸ்
இல் 3 DRIVE இருந்தால் FORMAT
பண்ணும்போது DRIVE C இல்
கிளிக் செய்து DRIVE OPTION
( ADVANCED ) கிளிக் செய்வும்
பொது கீழே FORMAT
காமிக்கும் FORMAT கிளிக்
பண்ணிட்டு NEXT
கொடுத்தால் போதும்
அதன் பிறகு DISK0 PARTITION 2
C DRIVE , DISK0 PARTITION 3 D
DRIVE  , DISK0 PARTITION 4 E DRIVE
ஆகவும் தோன்றும்.
இங்கே நீங்கள் கவனமாக செய்ய
வேண்டும் வேற DRIVE வில்
மாத்தினால் அந்த DRIVE
மொத்தமாக அழிந்து விடும்
இதில் DISK0 PARTITION 1 SYSTEM
DESERVED என்றால் உங்கள்
ஹர்ட்டிச்க் ( HARDDISK ) இல்
இருந்து 100 முதல் 150 MB
வரை கணணி எடுத்து
கொள்ளும் ( FOR SOME PROCESS
OR FOR CACHE MEMORY ) அந்த 100
முதல் 150 MB
உங்களுக்கு கிடைக்காது
கீழை படத்தில் பார்த்தல்
புரியும்
NEXT கொடுத்த
பிறகு உங்களுடைய OS ரன்
ஆகும் சிறிது நேரம்
காத்திருக்கவும்
இப்படி ஒவ்வென்றாக INSTALL
ஆகும் காத்திருக்கவும்
இவ்வாறு முடிந்த
பின் விண்டோஸ் RESTART
ஆகும்
RESTART ஆனா பிறகு சில
டைம் PRESS ANY KEY TO
CONTINUE என்று கேட்கும்
இங்கே எந்த KEY வும் பிரஸ்
பண்ண வேண்டாம் பிரஸ்
பண்ணினால் மீண்டும்
முதலில் இருந்து வரும்
எல்லாம் முழுமையாக
INSTALL ஆன பிறகு RESTART
NOW கொடுக்க வேண்டும்
RESTART ஆகி RUN
ஆகும்வரை காத்திருங்கள்
பிறகு வரும் WINDOW வில்
நீங்கள் விரும்பும் NAME
அல்லது உங்கள் NAME
கொடுத்து NEXT
கொடுக்கவும்
பிறகு PASSWORD
கொடுத்து கொள்ளுங்கள்
உங்கள் PASSWORD மறக்காமல்
இருக்க HINT கொடுத்து NEXT
அடுத்து வரும் WINDOW வில்
PRODUCT KEY கேட்கும்
உங்களுக்கு PRODUCT KEY
தெரிந்தால் கொடுக்கலாம்
அல்லது பிறகு ACTIVATOR
கொடுத்து ACTIVATE
பண்ணலாம் கிளிக் NEXT
அடுத்து வரும் WINDOW வில்
USE RECOMMENTED SETTINGS
அதன் பிறகு TIMEZONE, DATE
AND TIME கொடுத்து NEXT
கிளிக் செய்யவும்
இதில் TIMEZONE நில்
இந்தியாவிற்கு
(UTC+05:30) Chennai, Kolkata,
Mumbai, New Delhi
இதை தேர்ந்துதேடுகவும்
அடுத்து வரும் WINDOW வில்
HOME NETWORK கிளிக்
செய்து NEXT கொடுக்கவும்
அவ்வளவு தான் விண்டோஸ்
வந்து விடும்
விண்டோஸ் வந்த
பிறகு முதலில் விண்டோஸ்
7 ACTIVATE செய்ய வேண்டும்
உங்களிடம் ACTIVATOR
இருந்தால்
அதை வைத்து ACTIVATE
செய்யுங்கள் ACTIVATOR
இல்லை என்றால்
இங்கே சென்று டவுன்லோட்
செய்து ACTIVATE
செய்து கொள்ளுங்கள்
WINDOWS 7 ACTIVATOR
விண்டோஸ் ACTIVATE
ஆகி விட்டதா என்பதை
பார்பதற்கு DESKTOP பில்
COMPUTER ICON ஐ RIGHT CLICK
செய்து PROPERTIES
கொடுத்தால்
அங்கு உங்களுக்கு WINDOWS IS
ACTIVATED என்று தெரியும்
விண்டோஸ் ACTIVATE
ஆனா பிறகு நீங்கள்
உங்களுடைய லேப்டாப்
DRIVERS கண்டிப்பாக
இன்ஸ்டால் செய்ய வேண்டும்
DRIVERS இன்ஸ்டால்
செய்யவில்லை என்றால்
உங்கள் லேப்டாப் செரியாக
வேலை செய்யாது
உங்களிடம் லேப்டாப் DRIVERS
இருந்தால் INSTALL பண்ணுங்க
இல்லையென்றால்
இங்கே சென்று உங்களுக்கு
தேவையான லேப்டாப் மாடல்
தேர்வுசெய்து DRIVERS
டவுன்லோட் செய்து INSTALL
கொள்ளுங்கள்