சனி, 4 ஏப்ரல், 2015

Microsoft-ன் புது சரக்கு

மைக்ரோசாப்ட் நிறுவனம்
தனது புதிய செயலியான
ஆபிஸ் லென்சை அறிமுகம்
செய்துள்ளது. ஆபிஸ் லென்ஸ்
செயலி நமக்கு தேவையான
டாகுமென்ட்களை நொடி
பொழுதில் ஸ்கேன்
செய்யக்கூடியது. ஆரம்பத்தில்
விண்டோஸ் போன்களுக்காக
மட்டும் வெளிவந்த இந்த
செயலி இப்போது
ஆன்டுராய்டு மற்றும் ஐ
போன்களுக்கும்
வெளிவந்துள்ளது.
சில நேரங்களில் நம்மிடம் ஒரு
ஸ்கேனர் இருந்தா எவ்வளவு
நல்லாருக்கும் என்று
நினைப்பது உண்டு. அந்த
மனக்குறையை போக்கும்
வகையில் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் ஆபிஸ் லென்ஸ்
செயலி செயல்படுகிறது.
விசிட்டிங் கார்ட், வைட்
போர்டு, டாகுமென்ட்ஸ்,
மெனு கார்ட் என்று எதையும்
விடாமல் ஸ்கேன் செய்து,
மைக்ரோசாப்ட் வோர்ட் மூலம்
தொகுத்துகொள்ளலாம்
(எடிட் )
சில வசதிகள்
ஆபிஸ் லென்ஸ் செயலில்,
விசிட்டிங் கார்டு
போன்றவைகளை ஸ்கேன்
செய்யும்போது, ஓரங்களை
சரியான வகையில் வெட்டி,
தரமான படமாக மாற்றுகிறது.
வோர்ட்பிரஸ் – வெப் டிசைனிங்
கற்றுக்கொள்ளுங்கள்
சாதாரண ஆச்சு வடிவில்
இருக்கும் செய்தி ஒன்றை OCR
தொழில்நுட்பத்தில் ஸ்கேன்
செய்து PDF, Doc, Jpeg போன்ற
பார்மட்களுக்கு
மாற்றக்கூடியது.
விசிட்டிங் கார்டுகளை
ஸ்கேன் செய்து போன்
தொடர்புகளில் (Contacts)
இணைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக