செவ்வாய், 10 நவம்பர், 2015

டேட்டா பிரச்சனைக்கு ஒரு தீர்வு

ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பேக்
அடிக்கடி தீர்ந்து விடுகின்றதா,
அளவாக பயன்படுத்தினால் டேட்டா அதிக
நாள் கிடைக்கும் என்று உங்களுக்கு
தெரியுமா. ஸ்மார்ட்போனில்
டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில
எளிய தந்திரங்களை தான் இங்கு நீங்கள்
பார்க்க இருக்கின்றீர்கள்.
மொபைல் டேட்டா பயனம் செய்யும்
போது இன்டர்நெட் பயன்படுத்தினால்
அதிக டேட்டா செலவாகும், இதை
தவிர்க்க புதிய இடங்களில் பைபை
பைன்டர் அப்ளிகேஷனினை
பயன்படுத்தலாம், இது அருகாமையில்
இருக்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை
கண்டறியும்.
இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்வதும்
அதிக டேட்டாவினை பயன்படுத்தும்.
முடிந்த வரை பதிவேற்றங்களை
குறைத்து கொள்வது நல்ல பலன்களை
தரும்.
பாடல் மற்றும் யூட்யூப் வீடியோக்களை
ஸ்ட்ரீம் செய்வது அதிக டேட்டாவை
எடுத்து கொள்ளும், மாறாக
அவைகளை பதிவிறக்கம் செய்து
பார்க்கலாம்.
வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் மற்றும் ஸ்கைப்
கால்களை தவிர்த்து எமோஜிகளை
கொண்டு குறுந்தகவல் அனுப்பலாம்.
உங்களுக்கு தேவையில்லாதவைகளை
டவுன்லோடு செய்யாதீர்கள்.
பதிவிறக்கம் செய்வதானால் வைபை
பயன்படுத்தலாம் இது மொபைல்
டேட்டாவை சேமிக்கும்.
முடிந்த வரை இலவசமாக கிடைக்கும்
அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம்.
சந்தையில் கிடைக்கும் பல
அப்ளிகேஷன்கள் இன்டர்நெட்
பயன்படுத்தும் வகையில் இருக்கும்
முடிந்த வரை அவ்வாறான செயலிகளை
தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக