general news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
general news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜூன், 2014

புதன் கோளைப் பற்றிய சில தகவல்கள்

சூரியக்குடும்பத்தில் உள்ள
புதனைத்தான் பார்க்க முடியாத
கிரகம் என்று விஞ்ஞானிகள்
அழைக்கின்றனர். ஆங்கிலத்தில்
மெர்குரி என்று அழைக்கப்படும்
புதன், சூரியனுக்கு அடுத்ததாக
அமைந்துள்ளது. புதன் குறித்த
சில அடிப்படைத் தகவல்களைப்
பார்ப்போம்...
* பூமியின் விட்டத்தில் மூன்றில்
ஒரு பங்கு தான், புதனின் விட்டம்.
அதேபோல பூமியின் மொத்த
எடையில் 5.5 சதவீதம் தான்
புதனின் எடை.
* சூரியனை மிக வேகமாகச்
சுற்றி வரும் புதன், சூரியனில்
இருந்து சுமார் 5.8
கோடி கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறது.
* நம்முடைய நாள் (24 மணி நேரம்)
கணக்குப்படி 88 நாட்களில்
சூரியனைச் சுற்றி வருகிறது,
புதன். அதாவது, புதனில்
ஒரு வருடம் என்பது நமக்கு 88
நாட்களாகும்.
* புதன்,
தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55
நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
* மெர்குரி என்பது, ரோம்
நாட்டிலுள்ள சந்தனத்தால் ஆன
இறக்கைகளைக் கொண்ட
தேவதூதனின் பெயராகும்.
* இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக
அருகில் இருப்பதால், சூரிய
ஒளியின்
பிரகாசத்துக்கு நடுவே இதைக்
காண்பது கடினம். பொதுவாக
சூரிய
உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும்,
சூரிய
அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப்
பின்பும் தான் இதைப் பார்க்க
முடியும். அதையும்
எப்போதாவது தான் பார்க்க
முடியும். எனவே, புதனைப்
பார்த்தவர்களின்
எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
* புதனுக்கு மிக மெல்லிய
வளிமண்டலம் இருக்கிறது. இந்த
வளிமண்டலம், சோடியம்,
பொட்டாசியம், ஹீலியம் மற்றும்
ஹைட்ரஜனால் ஆனது.
* பகல் நேரத்தில் 427
டிகிரி செல்சியஸ் வெப்பமும்,
இரவு நேரத்தில் 173
டிகிரி செல்சியஸ் வெப்பமும்
புதனில் காணப்படும

ஞாயிறு, 29 ஜூன், 2014

'பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த தாய்லாந்து சிறுமியை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம

தாய்லாந்து நாட்டின் தலைநகர்
பாங்காக்கில்
மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும்,
கீழ் பகுதி பாம்பாகவும்
தோற்றமளிக்கும் விசித்திர
சிறுமியை காண நாள்தோறும்
ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில்
காத்திருக்கும் செய்தி ஆசிய
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது 8 வயது சிறுமியாக
இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த
சிறுமி பிறந்த
போதே அவளது உடலின் கீழ்
பகுதி பாம்பின் தோற்றத்துடனும்,
தலை முதல் மார்பு வரையிலான
பகுதி மனித தோற்றத்துடனும்
இருந்ததாக அவளது பெற்றோர்
கூறுகின்றனர்.
இதைப் போன்ற வினோதப் பிறவிகள்
உலகில் தோன்றுவது மிக, மிக
அரிது என குறிப்பிடும் உடல்
கூறியல் வல்லுனர்கள், இந்த
முரண்பாடான உடல்
அமைப்பை மருத்துவ
குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ்
மெலியனார்கிஸ்’ அல்லது 'ஜிங் ஜிங்
நோய்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இயற்கை படைப்பின் இந்த
முரண்பாட்டினை நிவர்த்திக்க
இதுவரையில் எவ்வித
சிகிச்சை முறையும்
கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்
தாய்லாந்து நாட்டின் மருத்துவ
வல்லுனரான டாக்டர் பிங் லாவ்
என்பவர் கூறியுள்ளார்.
பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-
வை தரிசிக்கவும்,
அவளது உடலை தொட்டு கண்களில்
ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த
மதத்தினர், உள்ளூர் மற்றும்
வெளிநாடுகளை சேர்ந்த
ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும்
அதிகாலை முதல்
நள்ளிரவு வரை நீண்ட வரிசையில்
கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.
அவர்கள் வழங்கும்
காணிக்கை பணத்தின் மூலம் அந்த
பெண்ணின் குடும்ப வருமானமும்,
வாழ்க்கை தரமும் குறுகிய
காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான
வளர்ச்சியை அடைந்துள்ளது.
இருப்பினும், அவர்களின்
நிம்மதியும், தனிமையும்
தொலைந்துப் போனதாக மய்
லி ஃபே-வின் நெருங்கிய உறவினர்
ஒருவர்
தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.