கூகுள் நிறுவனத்தின் சமூக
இணைய தளமான ஆர்குட் கடந்த 2004-ம்
ஆண்டில் துவங்கப்பட்டபோது நல்ல
முன்னேற்றத்தையையே கண்டது.
ஆனால் அதே ஆண்டு பேஸ்புக்
இணைய தளமும் பயனுக்கு வந்ததும்
ஆர்குட்டின் பயன்பாடு குறையத்
தொடங்கியது.
2008-ம் ஆண்டிற்குப்
பிறகு பிரேசிலிலும்,
இந்தியாவிலும் மட்டுமே இந்த
இணைய தளத்தைப்
பயன்படுத்துபவர்கள் இருந்து வந்தனர்.
ஆனாலும், கடந்த 2010-ம் ஆண்டில்
இந்தியாவில் பேஸ்புக்
பயனாளர்களின்
எண்ணிக்கை ஆர்குட்டைவிட
அதிகரிக்க அதேபோல் 2012-ல்
பிரேசிலிலும் பேஸ்புக் முதலிடம்
பெற்றது.
பேஸ்புக்
போட்டியை எதிர்கொள்வதற்காக
கூகுள்+ஐ அறிமுகப்படுத்த
வேண்டிய கட்டாயம் கூகுள்
நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
இப்போதும் லட்சக்கணக்கானோர்
ஆர்குட்டைப் பார்வையிடுகின்றனர்
என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இணையதளத் தகவல்
வெளியீட்டின்படி 50 சதவிகித
ஆர்குட் பயனாளர்கள் பிரேசிலிலும்,
20 சதவிகிதப் பயனாளர்கள்
இந்தியாவிலும் இருப்பதாகத்
தெரியவருகின்றது.
ஆனால் மந்தமான வர்த்தகப்
பயன்பாட்டைத் தொடர்ந்து, வரும்
செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன்
இந்த தளத்தை மூட இருப்பதாக
ஆர்குட்டின் பொறியியல்
இயக்குனரான பாலோ கோல்கர்
நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது இருக்கும் பயனாளார்கள்
தங்களின் தகவல்
பக்கங்களை பரிமாறிக்கொள்ளமுடியுமே தவிர
புதிய வருகைகள் நேற்று முதல்
நிறுத்தப்படுவதாகவும் அவர்
அறிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களில் உலகின்
அனைத்துப் பகுதிகளிலும்
யூ டியூப், பிளாகர், கூகுள்+
போன்றவை மக்களிடையே நல்ல
வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவை அனைத்தும் ஆர்குட்டைவிட
அதிக வளர்ச்சி வாய்ப்பைப்
பெற்றுவிட்டதால் ஆர்குட்
தளத்திற்குப் பிரியாவிடை அளிக்க
முடிவு செய்துள்ளோம்
என்று கோல்கர் விளக்கியுள்ளார்.
வியாழன், 3 ஜூலை, 2014
ஆர்குட் இணையதள சேவையை நிறுத்துகிறது கூகுள்
புதன், 2 ஜூலை, 2014
நினைவகம் அட்டை (memory card)
இன்று memory card என்பது பெரும்பாலும் அனைவராலும் பயன் படுத்தப்படுகிறது நாம் அதைப் பற்றி தெரிந்து வைத்து இருப்பது கொஞ்சமே
அனைத்து memory cardகளிலும் class என எழுதப்பட்டு இருக்கும் அதன் அருகில் ஒரு எண் எழுதப்பட்டு இருக்கும் உதாரணமாக 4 என எழுதப்பட்டிருந்தால் அதன் தகவல் பரிமாற்ற வேகம் (data transfer speed) 4mbps (msga bytes per second) ஆகும்
அதேபோல 10 என எழுதப்பட்டிருந்தால் 10mbps ஆகும். ஒரு சில memorycard களில் 4 என எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் இதுவும் அதன் தகவல் பரிமாற்ற வேகத்தை குறிக்கும். இதுவே memorycard களின் விலை ஒன்றுக்கொன்று மாறுபடுவதற்கான காரணம் ஆகும்
செவ்வாய், 1 ஜூலை, 2014
கீறல் விழுந்த குறுவட்டில் உள்ள தகவல்களை மீட்க
முக்கியமான ஆவணங்கள் கொண்ட
டி.வி.டி அல்லது வி.சி.டி (DVD/
VCD) அதிகமான கீறல்களால்
(scratches)
அவைகளை மீட்டெடுக்க
முடியாமல் போனதா?
கவலை வேண்டாம். 'வாழைப்பழம்'
அல்லது 'டூத்பேஸ்ட்'-ஐ,
கீறல்களின்மேல் படத்தில்
காட்டப்பட்டிருப
்பதை போல் கடிகார திசையில்
(Clockwise)
தடவி பிறகு சுத்தமான நீரில்
கழுவினால்
போதும். கீறல்கள் மாயமாய்
போகும். செய்துதான்
பாருங்களேன் !!!