வியாழன், 3 ஜூலை, 2014

இந்திய விமான படையின் தொலைநோக்கு பார்வை

அடுத்த தலைமுறை இளைஞர்கள்
இந்திய விமானப்படையில் சேர
ஆர்வத்தை தூண்டும் வகையில்
புதிய 3டி மொபைல் கேம்
ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியன்
ஏர் போர்ஸ்.
'கார்டியன்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ்' என்ற
அந்த மொபைல்
கேமை விமானப்படை தளபதி சுகுமார்
இன்று வெளியிட்டார்.
எதிரிகளை தாக்கி அழிக்கும் சூ-30
எம்.கே.ஐ போர் விமானத்தின்
சாகசங்களின் அடிப்படையில் இந்த
வீடியோ கேம்
உருவாக்கப்பட்டுள்ளது. 14 முதல் 18
வயது வரையிலான
இளைஞர்களுக்கு விமான படையில்
சேர்வதற்கான
ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்
மொபைல் போனில் விளையாடும்
அப்ளிகேஷனை இந்திய
விமானப்படையினர்
உருவாக்கியுள்ளனர்.
ஆன்ட்ராய்டு, விண்டோஸ், ஐஓஎஸ் என
அனைத்து ஆபரேட்டிங் சிஸ்டங்களில்
உள்ள மொபைல்களிலும் இயங்கக்
கூடிய அளவில் இலவசமாக இந்த
3டி கேம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கேமை விளையாடும்
போது இளைஞர்கள் மிக த்ரில்லான
அனுபவத்தை பெறுவார்கள்,
ஒவ்வொரு நாளும்
அவர்களுக்கு இந்திய
விமானப்படையில் சேரும் ஆர்வம்
அதிகரிக்கும். இந்த கேமில்
பல்வேறு கட்டங்களாக
சாதனைகளை நிகழ்த்தும் வகையில்
காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால்
இளைஞர்கள் மத்தியில் நிச்சயம்
வரவேற்பு இருக்கும் என்று ஏர்
மார்ஷல் சுகுமார் தெரிவித்தார்.
Click here to download

ஆர்குட் இணையதள சேவையை நிறுத்துகிறது கூகுள்

கூகுள் நிறுவனத்தின் சமூக
இணைய தளமான ஆர்குட் கடந்த 2004-ம்
ஆண்டில் துவங்கப்பட்டபோது நல்ல
முன்னேற்றத்தையையே கண்டது.
ஆனால் அதே ஆண்டு பேஸ்புக்
இணைய தளமும் பயனுக்கு வந்ததும்
ஆர்குட்டின் பயன்பாடு குறையத்
தொடங்கியது.
2008-ம் ஆண்டிற்குப்
பிறகு பிரேசிலிலும்,
இந்தியாவிலும் மட்டுமே இந்த
இணைய தளத்தைப்
பயன்படுத்துபவர்கள் இருந்து வந்தனர்.
ஆனாலும், கடந்த 2010-ம் ஆண்டில்
இந்தியாவில் பேஸ்புக்
பயனாளர்களின்
எண்ணிக்கை ஆர்குட்டைவிட
அதிகரிக்க அதேபோல் 2012-ல்
பிரேசிலிலும் பேஸ்புக் முதலிடம்
பெற்றது.
பேஸ்புக்
போட்டியை எதிர்கொள்வதற்காக
கூகுள்+ஐ அறிமுகப்படுத்த
வேண்டிய கட்டாயம் கூகுள்
நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
இப்போதும் லட்சக்கணக்கானோர்
ஆர்குட்டைப் பார்வையிடுகின்றனர்
என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இணையதளத் தகவல்
வெளியீட்டின்படி 50 சதவிகித
ஆர்குட் பயனாளர்கள் பிரேசிலிலும்,
20 சதவிகிதப் பயனாளர்கள்
இந்தியாவிலும் இருப்பதாகத்
தெரியவருகின்றது.
ஆனால் மந்தமான வர்த்தகப்
பயன்பாட்டைத் தொடர்ந்து, வரும்
செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன்
இந்த தளத்தை மூட இருப்பதாக
ஆர்குட்டின் பொறியியல்
இயக்குனரான பாலோ கோல்கர்
நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது இருக்கும் பயனாளார்கள்
தங்களின் தகவல்
பக்கங்களை பரிமாறிக்கொள்ளமுடியுமே தவிர
புதிய வருகைகள் நேற்று முதல்
நிறுத்தப்படுவதாகவும் அவர்
அறிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களில் உலகின்
அனைத்துப் பகுதிகளிலும்
யூ டியூப், பிளாகர், கூகுள்+
போன்றவை மக்களிடையே நல்ல
வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவை அனைத்தும் ஆர்குட்டைவிட
அதிக வளர்ச்சி வாய்ப்பைப்
பெற்றுவிட்டதால் ஆர்குட்
தளத்திற்குப் பிரியாவிடை அளிக்க
முடிவு செய்துள்ளோம்
என்று கோல்கர் விளக்கியுள்ளார்.

புதன், 2 ஜூலை, 2014

நினைவகம் அட்டை (memory card)

இன்று memory  card என்பது பெரும்பாலும் அனைவராலும் பயன் படுத்தப்படுகிறது நாம் அதைப் பற்றி தெரிந்து வைத்து இருப்பது கொஞ்சமே
அனைத்து memory cardகளிலும் class என எழுதப்பட்டு இருக்கும் அதன் அருகில் ஒரு எண் எழுதப்பட்டு இருக்கும் உதாரணமாக 4 என எழுதப்பட்டிருந்தால் அதன் தகவல் பரிமாற்ற வேகம் (data transfer speed) 4mbps (msga bytes per second) ஆகும்
அதேபோல 10  என எழுதப்பட்டிருந்தால் 10mbps ஆகும். ஒரு சில memorycard களில் 4 என எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் இதுவும் அதன் தகவல் பரிமாற்ற வேகத்தை குறிக்கும். இதுவே memorycard களின் விலை ஒன்றுக்கொன்று மாறுபடுவதற்கான காரணம் ஆகும்